கிருஷ்ண ஜெயந்தி: தாராபுரம் சாய்பாபா கோவிலில் மாறுவேடப் போட்டி - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.



Coimbatore: தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு "இயலாதவர்களை தேடி" என்ற உதவி சேவை திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாறுவேடப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ணரை வழிபட்டனர். மாறுவேடப் போட்டியைத் தொடர்ந்து நடன போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் S. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அவை தலைவர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர் யூசப், திமுக முன்னாள் நிர்வாகிகள், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம் ஜெய்லானி, சமூக நலத்துறை கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜி நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...