கோடை விடுமுறையினை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களின் அலைமோதும் பொதுமக்கள்


தமிழகம் முழுவதும், தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவுபெற்று கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக குழந்தைகளுடன் பெற்றோர்களும், தங்களது சொந்த ஊர், உறவினர் வீடு மற்றும் சுற்றுலா என பயணித்து வருகின்றனர். 

இவ்வாறு பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகப்படியாக கூட்டம் அலைமோதி வருகிறது. 



இந்நிலையில், தற்போது கோடை கால சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இவை பேருந்து கட்டணத்தை விட குறைவு என்பதாலும், நேரம் குறைவான பாதுகாப்பான பயணம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையினையே அதிகம் விரும்புகின்றனர்.



இதனிடையே, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலைப் பயண்படுத்தி திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறும் என்பதால் அதிகப்படியான காவல்துறையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...