அறம் அறக்கட்டளை சார்பில் சின்மையா வித்யாலயா பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்புப் பயிற்சி

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறம் அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் செயல்பட்டு வரும் சின்மையா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான தற்காப்புப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியினை விவேக் மற்றும் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். மேலும், இதில் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமின்றி குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்தும் கற்றுத்தரப்பட்டது.



குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, கடத்தல், கொலை உள்ளிட்ட தற்போதைய சமூகச் சூழலில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.



மேலும், தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வேண்டும் என்பன குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...