கோவை உட்பட நான்கு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான்கு பெரிய மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.



சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் வருகிற பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் சார்பில், குரங்கம்மை பாதிப்புகள் குறித்த பதாகைகள் விமான நிலையத்தில் பரவலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு கல்லூரி மருத்துவமனை, திருச்சிகி.ஆ.பெ. விசுவநாதம் அரசு கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளிலும் குரங்கமைக்கென்று பிரத்தியேக வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் எங்கும் கண்டறியப்படவில்லை எனக்கூறி இருப்பதாகவும் இந்த சூழலில் கேரள எல்லைப் பகுதியில் குரங்கமை பாதிப்பு குறித்து சோதிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருந்தகம் குறித்து,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய்களுக்குரிய மருந்துகள் இலவசமாக தரப்பட்டு கொண்டிருப்பதாகவும் மருந்துகளை குறைந்த விலையில் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் மருந்தகத்தை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், முதல்வர் அறிவித்திருப்பது போல் பொங்கல் தினத்தன்று ஆயிரம் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எந்த மருத்துவமனையிலும் இல்லை என்றும் கூறிய அவர், மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு பிளாக்கில் ஒரு தளம் மட்டும் இயங்கி வருவது குறித்து, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தளமும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...