தீக்கதிர் நாளிதழ் நடத்தும் அடுத்து என்ன ? மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் ஏப்ரல் 28ம் தேதியன்று (இன்று) நடைபெறுகிறது. இதில் கல்வியாளர்கள், தொழில்துறை நிபுனர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்து வழிகாட்டுகின்றனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் உயர்க் கல்வி படிப்பதற்கு எதை படிப்பது ?, என்ன படிப்பது ? என்றும், கல்விக்கடனை வங்கியில் எப்படி பெருவது என்பது குறித்து சக மாணவர்களோடும், பெற்றோர்களோடும் கலந்துரையாடி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை உணர்ந்து தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் கல்வி அமைச்சரும், மாபாய் பயிற்சி மையத்தின் நிறுவனருமான க.பாண்டியராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், கல்வியாளர் டி.நெடுஞ்சழியன், கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஜே.வணங்காமுடி, அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் கணேஷ் ஆகியோர் பங்கேற்று உயர்கல்வியும், வேலை வாய்ப்பும், வரவேற்க காத்திருக்கும் எதிர்காலம், அனைவரும் பெறலாம் கல்விக்கடன், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அனுமதி இலவசமாய் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...