கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒத்தகால்மண்டபம் மாசிகவுடன்பதி பகுதியைச் சேர்ந்தவர் பிராகாஷ் (28). இவரது மனைவி சத்யபாமா. பிரகாஷ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, அதேப் பகுதியைச் சேர்ந்த செவிலியரான ஜகதாம்பாள் என்பவருடன் பிரகாஷ்-க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி பிரகாஷை ஜகதாம்பாள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜகதாம்பாளை பிராகாஷ் தனது நண்பர் ரூபேஷ் என்பவருடன் இணைந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு டவுன் காவல்துறையினர் பிரகாஷ், அவரது மனைவி சத்யபாமா, பிராகாஷின் நண்பர் ரூபேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கில் சேர்க்கப்பட்ட பிராகாஷின் மனைவி சத்யபாமா மற்றும் நண்பர் ரூபேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பிராகாஷுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.