கோவையில் எட்டாம் வகுப்பு மாணவன் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி செல்போன் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் தேடுதலின் போது ஒரு குற்றவாளி காயமடைந்தார்.
Coimbatore: கோவையில் பள்ளி மாணவன் ஒருவரைக் கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழங்கிய தகவல்களின் விவரம்:
கடந்த வியாழக்கிழமை இரவு பிடம்பள்ளிக்கு அருகில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் டியூஷன் முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மர்ம நபர்கள் கத்தியுடன் அவரைத் தாக்கி, செல்போனைப் பறிக்க முயன்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விரைவில் ஐயப்பன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்றாவது குற்றவாளியான கண்ணனைத் தேடி வந்தனர்.
சூலூர் தனிப்படை போலீஸார் கண்ணனைப் பிடிக்கச் சென்றபோது, அவர் பள்ளத்தில் விழுந்து கையில் காயமடைந்தார். போலீஸார் அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கண்ணன் மீது 2021ஆம் ஆண்டு சூலூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.