கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மத்திய மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால், சமுதாய நலக்கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, வார்டு எண் 47க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலை பகுதி, நால்வர் லே-அவுட் பகுதி மற்றும் இரத்தினபுரி, பி.எம்.சாமி காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார்.



மேலும், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தினை ஆய்வு செய்து, அதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 47க்குட்பட்ட செல்வகுமாரசாமி கார்டன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிறுவர் விளையாட்டு பூங்காவை பார்வையிட்ட ஆணையாளர், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, இரத்தினபுரி, அமரர் ஜீவா சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்காவையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...