உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாகிறது. விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவ மழை மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக தக்காளி அறுவடையின் போது தக்காளி பழங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும், திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்த காரணத்தால், கடந்த சில வாரங்களில் 14 கிலோ பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், ஒரு சில இடங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் மாடுகளை மேய விட்டும், மற்றும் சாலை ஓரங்களில் கொட்டியும் வந்தனர்.



இந்நிலையில், தற்போது இன்று தக்காளி வரத்து அதிகமானாலும், 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்சமயம் மற்ற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து சீராக உள்ளதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...