நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. கடந்த 24-ந்தேதி அதிகாலை இந்த எஸ்டேட்டிற்குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர்(51) என்பவரை படுகொலை செய்தனர்.
இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரளா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்டட்ட நிலையில் ஊட்டி துணை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் விசாரணை நடத்த 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கேரளா விரைந்த தனிப்படை கடந்த இரண்டு நாளாக கேரளா மாவட்டம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் திருச்சூரை சேர்ந்த சதிஷ்., சந்தோஷ்., தீபக் என்பவர்களிடமும் மற்றும் மலப்புரத்தை சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.