பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் கல்லூரியின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வஞ்சிமா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகே புகையிலை, பாக்கு மற்றும் சிகரட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து நேற்று மாலை வஞ்சிமாநகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த பேக்கரி ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா மற்றும் சிகரட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பேக்கரி நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பரிமுதல் செய்தனர்.