பரம்பிக்குளம் அணை நிரம்பியது: மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 3,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை நேற்று (செப்டம்பர் 5) முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான இந்த அணை 72 அடி உயரமும், 17 டி.எம்.சி. மொத்த நீர்க் கொள்ளளவும் கொண்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 71.78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3,600 கனஅடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றப்படும் உபரி நீர் பொரிங்கல் குத்து அணை மற்றும் சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. மேலும், 1,000 கனஅடி நீர் சுரங்கப்பாதை வழியாக காண்டூர் கால்வாய்க்கு செல்கிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன் மற்றும் சங்கீதா ஆகியோர் அணையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...