உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்பில் கோவை ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை: 20 பதக்கங்கள் வென்று அசத்தல்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


Coimbatore: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள் அரங்கில் கடந்த 4 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட 10 மாணவர்களும் 20 பதக்கங்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 20 பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தேவேந்தரன், கவுரி, செயலாளர் ரவிக்குமார், நிர்வாகி உதயேந்திரன், வித்யாஸ்ரம் பள்ளியின் இயக்குனர் சவுந்தர்யா, ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா, சிலம்பம் பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி வாகை சூடி வந்த வீரர் வீராங்கனைகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சந்தன மாலைகள் அணிவித்தும், சால்வைகள் போற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...