திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீசார் 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மடத்துக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.

செங்கழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த பாசுதேப் பால் (34) என்ற இளைஞரின் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பாசுதேப் பாலிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.