கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா கொண்டாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாதா வேடங்களில் பவனி வந்தனர். "ஒளியின் விதை" கத்தோலிக்க மின்னிதழும் துவக்கப்பட்டது.


கோவை: கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலயத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலவிதமான மாதா வேடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனியாக வந்தனர். இத்துடன் மாதாவின் வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது.



மேலும் "ஒளியின் விதை" என்ற கத்தோலிக்க மின்னிதழும் இன்று சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், டான் போஸ்கோ எக்சல்லேன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பெர்னான்டு மோசஸ் அவர்களும் புனித ஜான் போஸ்கோ ஆலயப் பங்குத்தந்தை ததேயு சைமன் கென்னடி அவர்களும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினர்.



இவ்விழாவில் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...