கோவையில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி, எம்பி கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி 800 கி.மீ. தொலைவு பயணிக்கும்.


கோவை: கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது. கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



இதையொட்டி, அருளகம் அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வஉசி பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த வாகனப் பிரசாரத்தை எம்பி கணபதி ப.ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு கானுயிர் வாரிய உறுப்பினர் ஓசை கே.காளிதாசன் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத்துணைத் தலைவர் நா.மணிசுந்தர் ஆகியோர் பாறு கழுகுகள் இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.



அருளகம் அமைப்பின் நிறுவனர் சு. பாரதிதாசன் கூறுகையில், "தமிழகம் முழுக்க வலம் வந்த பாறு கழுகு பறவைகள் தற்போது கோவை, நீலகிரி, முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. இவ்வினம் அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்து போன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலி போக்கி மருந்தின் தாக்கம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த விலங்குகளின் விஷம் தடவப்பட்ட சடலங்களை உண்டதாலும், இறந்த விலங்குகளைப் புதைத்ததால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகவும் அதிக அளவில் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த வாகனப் பிரசாரம் கோவையில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதிகளைச் சுற்றிலும் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு செல்ல உள்ளதாக பாரதிதாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...