தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.வாசன் கருத்து

உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது தினமும் பல இடங்களில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம், போதைப் பொருள் விற்பனை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் குறித்து வெளிநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது ஏற்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசும்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூரண மதுவிலக்கு குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், பூரண மதுவிலக்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய நீர்ப்பாசனமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முறைகேடுகளால் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் உள்ளதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயத்தை பாதிக்கும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடுமலை ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நத்தம் வீட்டுமனை பட்டாக்களில் அளவீடு, புல வரைபடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கணினி மயமாக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருவதாகவும், இவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். தற்சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தாமக மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி.ஆர். செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...