கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017' கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மட்டும் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் வழக்கம்போல் கோவை மாநகரம் பழைய நிலைக்கு மாறியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பை மற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையில் சாக்கடை நீர் வழிந்த்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தினத்தோறும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்த நிலைமை மாறுவதற்கும் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.


