மேட்டுப்பாளையம்- கோவை வழி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதித்தது. 



இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...