பத்திரிகை சுதந்திர தினம் இன்று...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் நாள் சர்வதேச பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அரசின் குறைகளையும் மற்றும் மக்களின் தேவைகளையும் எழுத்தின் மூலமாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை பெறுகின்ற உன்னத பணியை மேற்கொள்ளும் ஒருவரே உண்மையான பத்திரிகையாளராகிறார்.

அவ்வாறு பத்திரிகையாளர் ஒருவர் நிதர்சனங்களை எழுதும் பொழுது அவருக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் நாள் கொலம்பிய பத்திரிகையாளர் கிலேர்மோ கானோ இசாசா என்ற பத்திரிகையாளர் ஒருவர், அவரது அலுவலத்தின் முன்பு சமூக விரோதிகள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பிறகே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றது.

பத்திர்கை சுதந்திரத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இந்நாளில் யுனெஸ்கோ சார்பில் கிலேர்மோ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுமார் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்றால் சிறந்த பத்திரகை சுதந்திர போராளி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 25 டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மகராஷ்டிரா முன்னோடியாக திகழ்கிறது. அங்கு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களை பாதுக்காக்கும் விதமான இச்சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...