அன்னபூர்ணா விவகாரம்: நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



Coimbatore: கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "பன் மாலை" அணிந்தும், பங்கேற்பாளர்களுக்கு "க்ரீம் பன்" வழங்கியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு, தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "முதலில் அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும், அதனை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு. அவர் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை. தொழிலாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

"இதனை பாசிசத்தின் உச்சம் என நாங்கள் கண்டிக்கிறோம். உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும்" என்று செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

வீடியோவில் சீனிவாசனின் உடல்மொழி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "அந்த வீடியோவில் பார்க்கும் போது அவரால் இருக்கையில் நன்றாக கூட அமர முடியவில்லை. அவர் அடிமையா? இந்த தேசத்திற்கு வரி கட்ட கூடியவர். பல்லாயிரம் தொழிலாளிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருபவர் அவர் ஏன் கூனிக்குறுகி அமர வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஒரு நிதி அமைச்சரை சந்திக்க மற்ற கட்சியினர் செல்ல முடியுமா? இதைத் திட்டமிட்டு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று செல்வப்பெருந்தகை தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...