அன்னூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 154 மது பாட்டில்கள் பறிமுதல்

அன்னூர் அருகே பசூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 154 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸ் குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, ஒரு தனியார் இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பசூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து மொத்தம் 154 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்று வந்ததாக தெரிய வந்துள்ளது.



கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் சதாசிவம் ஆகியோர் மீது அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...