உதகையைச் சேர்ந்த சவுந்தரராஜன், ஷோபனா தம்பதியினரின் மகள் சவுமியா. கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்துவிட்டு கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக செவிலியராக பணியாற்றி வந்தார்.
ஆவாரம்பாளையம் அருகே விடுதியில் தங்கி பணியாற்றி வந்த சவுமியா, இன்று தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் சவுமியாவின் தோழிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், சவுமியாவைக் காண அவ்வப்போது இரண்டு நபர்கள் விடுதி அருகே வந்து செல்வர் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த வாலிபர்களை பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.