கோவை நஞ்சப்பா சாலையில் இளம்பெண் ஓட்டிய மின்சார ஸ்கூட்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

கோவை நஞ்சப்பா சாலையில் நடந்து சென்ற 71 வயது முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 19 வயது இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நஞ்சப்பா சாலையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக சுப்பிரமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்சார ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த அஷ்விதா (19) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஷ்விதா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...