கோவை நரசிபுரத்தில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் - வனத்துறை விரட்டியடிப்பு

கோவை நரசிபுரத்தில் 7-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவையில் உள்ள நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 21) நடந்தது.

கடந்த சில மாதங்களாக கோவையின் பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ஆகிய சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டம் விவசாய தோட்டங்களுக்குள் நுழையாமல் தடுக்க முயற்சி செய்தனர். பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குட்டிகளுடன் யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இன்று (செப்டம்பர் 22) வைரலாகி வருகின்றன.

வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானைகள் மீண்டும் அப்பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...