தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: டாஸ்மாக் கடை சீல் வைப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை புகார் அடிப்படையில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அதிகாரிகள் டாஸ்மாக் கடையை சீல் வைத்தனர். வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



பேரூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவர், டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த இரண்டு வயர் கட்டில்களை எடுத்து ஒன்றிணைத்து, அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இந்த வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டதை பார்த்த மது பிரியர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...