திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் கணக்காளர் நாகராஜ் கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோவையில் சிலர் மலிவு விலைக்கு சமையல் எண்ணெய் வாங்கி அதை டின்களில் அடைத்து, அதில் தங்கள் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அனந்த ராஜ் (35), சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (35) மற்றும் விவேகானந்தன் (35) ஆகிய மூவரும் முறைகேடாக சமையல் எண்ணெய் விற்பது தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.