கோவை பீளமேடு பகுதியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சி வார்டு 26ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் CSR நிதியுடன் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் முழு (100%) சமூக பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இந்த பணியை தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், பீளமேடு மற்றும் பாலகுரு கார்டன் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...