தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 26 முதல் 29 வரை மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவை இடம்பெறுகின்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா நடைபெற உள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங்கள், புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் மாதிரித் திடல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், தலைசிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறுகையில், "காலநிலை மாற்றம், விலையேற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், 'வேளாண்மையில் நவீன உத்திகள்' என்ற தலைப்பில் உழவர் தின விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இந்த விழாவில் புதிய பயிர் ரகங்கள், புதிய தொழில் நுட்பங்கள், மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள், வேளாண் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விளக்கங்கள், மற்றும் வேளாண் இயந்திரங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.

விழா நடைபெறும் நான்கு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள், வல்லுனர்கள், பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

இவ்விழாவை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைக்க உள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், தொழில் முனைவோர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...