குனியமுத்தூர், மயிலம்பட்டி, அண்ணா பல்கலை, அங்கலக்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மயிலம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை (செப்டம்பர் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் குனியமுத்தூர், சுந்தராபுரம் ஒரு பகுதி, கோவை புதூர், புட்டுவிக்கி, நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டன்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அங்கலக்குறிச்சி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் மின்தடை அமல்படுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...