ஜாதி பாகுபாடு: பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியதாக மாணவியின் தாய் புகார்

கோவை ராசிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ஜாதி பாகுபாடு காட்டி தன் மகளுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக மாணவியின் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் தனது மகளுக்கு ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திராகாந்தியின் மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தனது மகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆனால் தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக இந்திராகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "உனது குழந்தைக்கு பரிசு கொடுத்ததே தவறு" என்று கூறி, தன்னையும் தன் மகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாக கூறும் இந்திராகாந்தி, தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் இந்திராகாந்தி, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...