தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நடத்தும் 34-வது வியாபாரிகள் தின மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த வணிகர் சங்க பேரவை மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பேருந்து, வேன், கார்களில் வணிகர்கள் திரண்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மே 5ம் தேதி வியாபாரிகள் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் டீ கடை, டிபன் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தர வேண்டும். ஆத்துபாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தீர்க்க, இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது. சிறு வியாபாரிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி வரி குறித்து பல விதமான அனுமானங்கள் உலாவுகின்றன. வரி என்பதும் வியாபாரிகளுக்கு சிக்கலாகவோ, சுமையாகவோ இருக்க கூடாது என்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தலைவர் பரமசிவம், பொது செயலாளர் ராஜசிங், பொருளாளர் காசிலிங்கம், கெளரவ ஆலோசகர் கருணாகரன், மாவட்ட தலைவர் விசுவநாதன், துணைத் தலைவர் சிலுவை முத்துக்குமார் மற்றும் அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி மற்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.