கோவையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, ஒக்கிலியர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வும் நடைபெற்றது.


கோவை : கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 80-க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்" நடைபெற்றது.



இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் துவக்கி வைத்தார்.



துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. ஆணையாளர் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை ஆலோசனை, எலும்பு மூட்டு சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை நல மருத்துவம், தோல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், ECG ஸ்கேன், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு உடனடி சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



பொதுசுகாதாரக் குழு தலைவர் பெ. மாரிசெல்வன் அவர்களின் சொந்த நிதியில் 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் புடவை, ஜாக்கெட், வளையல்கள், பழவகைகள் உள்ளிட்ட சீதனப்பொருட்களை ஆணையாளர் வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.





"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுசுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



இந்நிகழ்ச்சியில் சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், நகர்நல அலுவலர் மரு. பூபதி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு. தினேஷ் பெரியசாமி, சுகாதார அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...