கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் GKNM மருத்துவமனை மற்றும் LMW நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடத்தியது. இதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ தொலைவு ஓட்டம், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 கி.மீ ஓட்டம், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. 5 மற்றும் 10 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்தம் ரூ.75,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மூலம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...