வால்பாறையில் மின் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

வால்பாறையில் செப்டம்பர் 30 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெறும். பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.


Coimbatore: வால்பாறை பகுதியில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், அய்யர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டாரப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிகள் வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.

மேலும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அங்கலக்குறிச்சி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இதனால் அவ்வப்போது மின் தடை ஏற்படலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மின் தடை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து, தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...