மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் ஆண்டு BMKC கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை இலுப்பம்பாளையம் கிராமத்தில் BMKC என்ற கபடி குழுவினர் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் பகல் இரவு நடைபெற்ற இந்த கபடி போட்டியில், இறுதிப் போட்டிக்கு சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கபடி அணியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.கே.சி அணியும் தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங்காபுரம் கபடி அணியினர், ஈரோடு அணியை 46-28 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் பரிசை வென்றனர். முதல் பரிசு பெற்ற லிங்கபுரம் அணிக்கு ரூ.30,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.20,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தை சேலத்தின் சாமி அகாடமி அணியும், நான்காவது இடத்தை கே.சி.கே கனுவாய் அணியும் பெற்றன. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...