உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு: வனத்துறை விசாரணை தீவிரம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 20 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் செடிகளை அழித்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தளி பிரிவுக்கு உட்பட்ட குழிப்பட்டி சுற்று பகுதியில் வனவர் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் 2 மீட்டர் நீளமுள்ள 20 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சா செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. மேலும் ஆய்வக பகுப்பாய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து உடுமலை வனச்சரகத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளா அல்லது மர்ம நபர்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவடப்பு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...