தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் கத்திரி வெயில் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கத்தரி வெயில் தொடங்குவத்தற்கு முன்னதாகவே கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுவும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி கோவையில் அதிகபட்சமாக 40 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்ற திரவ உணவை மக்கள் திக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெயிலின் உச்சம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வர்கள்.