கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி துப்புரவு காலனியில் பொதுக்குழாயில் வரும் தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டம் நடத்திய பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
கோவை வெரைட்டிஹால் பகுதியில் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் காலனி ( சி.எம்.சி காலனி ) அமைந்துள்ளது.இந்த காலனியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று துப்புரவு காலனியில் உள்ள பொதுக்குழாயில் வந்த குடிநீர் சாக்கடை கழிவுகள் கலந்து அசுத்தமாக வந்துள்ளது.இதனால் ஆவேசமடைந்த துப்புரவு காலனியை சேர்ந்த பொதுமக்கள் வெரைட்டி ஹால் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை மறியலை கைவிட வைத்ததுடன் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில் துப்புரவு காலனி பகுதியில் மாதம் ஓரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் அதிலும் கழிவு தண்ணீர் கலந்து வந்தால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் துப்புரவு காலனி பெண்கள்.
மேலும் துப்புரவு காலனியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஓருமுறை தண்ணீர் வழங்கப்படுவதாகவும் ஆனால் துப்புரவு காலனி பகுதிக்கு மாதம் ஓரு முறை தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.நல்ல தண்ணீர் மட்டுமல்ல, இந்த பகுதியில் உப்பு தண்ணீரும் கூட கிடைப்பதில்லை எனவும் ஆட்டோ எடுத்துக்கொண்டு ஊரைச்சுற்றி சென்று குடிதண்ணீர் எடுத்து வர வேண்டி இருப்பதாகவும் அதற்கு 200 ரூபாய் செலவழிக்க வேண்டி இருப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.மோசமான தண்ணீர் வருவதால் அதை பருகும் போது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இந்த காலனி பெண்கள் தெரிவிக்கின்றனர்.
துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் காலனியில் சுத்தமான தண்ணீர் வருவதில்லை எனவும் , தண்ணீர் குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக சுத்தமாக தண்ணீர் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துப்புரவு காலனியை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குடிதண்ணீரில் கழிவு தண்ணீர் கலந்திப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் கழிவு நீர் , குடி நீருடன் கலந்து வருவது தெரியவந்தது.இதனையடுத்து இரு தினங்களில் குழாயினை மாற்றிக் கொடுப்பதாகவும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.நகரை சுத்தம் செய்யும் பணியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சுத்தமான குடிநீருக்காக போராட வேண்டிய நிலையில் தவித்து வருகின்றனர்.