கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்

கோவையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு 6 நாள் பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் நடைபெற்றது. 29 கல்லூரிகளில் இருந்து 190 மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம் நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும், மேம்பாட்டுக்காகவும் சாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011 ஆண்டு முதல் இளையோர் செஞ்சிலுவை சங்கம் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு, அவசர கால முதலுதவி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி மேலாண்மை குறித்த ஆறு நாட்கள் பயிற்சி முகாம் துவங்கியது. கோவை இடிகரை பகுதியில் உள்ள ஆதித்யா சர்வதேச பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.

இதன் துவக்க விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவர் டாக்டர் முரளி, உயர்மட்ட குழு உறுப்பினர் மோகன் சங்கர், குமுதா பழனிச்சாமி, பூங்கோதை மற்றும் பள்ளி முதல்வர் அத்யா பர்வீன் பாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆறு நாள் முகாமில் சுமார் 29 கல்லூரிகளில் இருந்து 190 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் ஒவ்வொரு நாளும் விபத்து, இயற்கை சீற்றம், நில அதிர்வு, வெள்ள பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர் நேரங்களில் இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோருக்கு சரியான முதலுதவி அளித்து உயிர் காப்பது, சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி எவ்வாறு செயல்படுவது போன்ற பேரிடர் கால மீட்பு மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...