மடத்துக்குளம் அருகே வேடபட்டி ஊராட்சியில் 10 லட்சம் முறைகேடு: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முறைகேடு குறித்து புகார் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தில் அருகில் உள்ள வேடபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முறைகேடாக அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை திண்டுக்கல் மாவட்டத்தை போல அனைத்து விவசாயிகளுக்கும் தென்னைக்கு வட்ட பாத்தி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 100 கோடி ஒதுக்கி விரைவில் சீரமைத்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் அரசு ஊழியருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியது விதிமீறல் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் 10 லட்சத்தை திரும்ப பெறப்படும் எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு எழுதிக் கொடுத்தனர்.



தொடந்து விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் தற்காலிமாக கை விடபட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...