கோவையில் 250-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகைச் செடிகளுடன் மாபெரும் கண்காட்சி

கோவையில் KEERAIKADAI.COM நிறுவனம் நடத்தும் கீரை மற்றும் மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் விளக்கப்படுகின்றன.



Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில், KEERAIKADAI.COM நிறுவனம் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகைச் செடி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்களாக பங்கேற்றுள்ள கல்லூரி மாணவ மாணவிகள் கீரைகள் குறித்தும் அவற்றின் மருத்துவ பலன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த கண்காட்சியில் பொதுவாக உணவில் பயன்படுத்தப்படும் கீரைகள், பல்வேறு மூலிகைச் செடிகள், மற்றும் விஷம் முறிக்கும் மூலிகை செடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். QR Code மூலமும் பதிவு செய்து கொள்ள முடியும். பெரும்பாலான பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் வருகை தந்து கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

KEERAIKADAI.COM நிறுவனர் ஸ்ரீராம் பிரசாத் கூறுகையில், "ஒரு காலத்தில் 500 வகையான கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டனர். இது குறித்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றார்.



மேலும் அவர், "சென்னையில் இதுபோன்ற கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் 500-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகை செடிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கீரை மற்றும் மூலிகைச் செடிகளை வாங்க விரும்பினால், KEERAIKADAI.COM இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடம் உள்ள கீரைகள் பூச்சி கொல்லி மருந்துகள் எதுவும் சேர்க்கப்படாமல், இயற்கை விவசாயம் சார்ந்து தயாரிக்கப்படுகின்றன. பதப்படுத்துவதற்கு உப்பு, மஞ்சள் தூள், மிளகு உள்ளிட்டவற்றையே பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.



தற்போதைய கண்காட்சியில் உள்ள பெரும்பாலான கீரைகள் காட்சிப் பொருள்களாக மாறிவிட்டதாகவும், அவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் ஸ்ரீராம் பிரசாத் குறிப்பிட்டார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...