உடுமலை அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கல் நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, மின் மீட்டர் பொருத்தி இணைப்பு தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது, காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடுமலை அருகே விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...