ரூ.7,656 கோடியில் கோவை-கரூர் கிழக்கு பைபாஸ் ரோடு திட்டம்: தொழில் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய திட்டம்

கோவை-கரூர் கிழக்கு பைபாஸ் ரோடு திட்டம் ரூ.7,656 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. 182 கி.மீ தூரத்திற்கு அமையவுள்ள இந்த சாலை, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Coimbatore: கோவை முதல் கரூர் வரையிலான கிழக்கு பைபாஸ் ரோடு திட்டம் 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியே சுமார் 182 கிமீ தூரத்திற்கு இந்த பைபாஸ் ரோடு பசுமைப்பாதையாக உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 7,656 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டது.

இந்த பைபாஸ் ரோடு திட்டத்திற்கான சாத்திய கூறு அம்சங்கள் அறிவது கடந்த 2018ம் ஆண்டில் நடந்தது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினர் மூலமாக இந்த ரோடு பணிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டாக ஒன்றிய அரசு ஒன்றும் செய்யாமல் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.

கோவை மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பனியன், பவுண்டரி, பம்பு, மோட்டார், வெட் கிரைண்டர், ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் மூலமாக அதிக வருவாய் வழங்கப்படுகிறது. தொழில்களில் வேகமாக வளர சாலை கட்டமைப்பு அவசியம். கோவையில் உற்பத்தி பொருட்களை பின்னரும் வெளியூர், வெளி மாநிலம் அனுப்ப ரோடு வசதி சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவேதான் ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கான நிதியை பாரத் மாலா திட்டத்தில் இருந்து பெற்று பணியை நடத்தலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு பைபாஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இங்கே பைபாஸ் ரோடு அமைந்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கும். இப்போதுள்ளதைவிட கோவை வெகுவாக வளர்ச்சி பெறும். கோவை புறநகர் பகுதிகளும் நகருக்கு இணையாக வளர்ந்து விடும் என தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் புறநகர் வழியாக வாகனங்களை இயக்கும் வகையில் பைபாஸ் ரோடு பணி விரைவாக நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே ஒன்றிய அரசு இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் அமைப்பினர் காத்திருக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையக பொறியாளர்கள் கூறுகையில், "கொங்கு மண்டலத்தின் கனவு திட்டமாக இந்த பைபாஸ் ரோடு அமையப்போகிறது. அதிக கிமீ தூரமாக இருப்பதால் பல்வேறு பேக்கேஜ்களாக பணிகள் பிரிக்கப்படும். 4 மாவட்டங்களை உள்ளடக்கி இந்த ரோடு உருவாக்கப்படவுள்ளது. முன்னதாக விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதிகளவு நிலங்கள் கையகப்படுத்த வேண்டியுள்ளது. 3 ஆண்டில் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. வழிப்பாதையாக அமைய இருப்பதால் சரக்கு வாகனங்களுக்கு இனி தடை ஏதுவும் இருக்காது.

கோவை மண்டலத்தில் இருந்து அனைத்து வகையான வாகனங்கள் கோவை மார்க்கமாக கேரளாவிற்கு எளிதில் சென்று வர முடியும். இருமாநில போக்குவரத்திற்கும் இந்த பைபாஸ் உதவிகரமாக இருக்கும். ஊட்டி செல்வதற்கான இணைப்பு பாதையாகவும் இந்த பைபாஸ் இருக்கும். கோவையில் மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. ஒரு ஆண்டில் இந்த பணிகள் முடிந்து விடும். இந்த நிலையில் கிழக்கு பைபாஸ் அமைந்தால் வட்ட வடிவில் நகருக்குள் செல்லாமல் அனைத்து வகையான வாகனங்களும் புறநகருக்கும், கிராமங்களுக்கும், இதர மாவட்டங்களுக்கும் சென்று வர முடியும்.

இதன் மூலமாக நகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக தவிர்க்க முடியும். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிட்டதும் பணிகள் துவக்கப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் நடக்கிறது. தேசிய அளவில் 25 திட்டப்பணிகளுக்கு நெடுஞ்சாலை ஆணையகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது" என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...