உலக பார்வை தினம்: கோவை துடியலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை துடியலூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.



கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



துடியலூர் சிக்னலில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பார்வை தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு I மற்றும் II சார்பில் துடியலூர் பேருந்து நிலைய சந்திப்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா முன்னிலை வகித்தார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா, உதவி ஆய்வாளர் ஜி.குருகணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் துரை, சவிதாமணி, மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் முகப்பு பகுதியில் புல்ஸ்ஐ கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் எஸ்.கார்த்திக் மற்றும் சி.வினு ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...