எளிய பயணிகளுக்கு கட்டணம் உயராது; தரமான சேவை தொடரும் - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரயில்வே சேவைகள், RSS நூற்றாண்டு விழா, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையை ஒட்டி பல்வேறு கல்வி நிலையங்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் புதிய திறமைகளை கற்றுக் கொள்ளக்கூடிய இயற்கையான சூழலோடு இணைந்து இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள் காலத்தினுடைய தேவையாக இருக்கிறது என்றும் கூறினார்.

பாஜகவின் சித்தாந்தத்தின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்குவதாகவும் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பின்தலைவர் மோகன் பகவத், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற கோவில்கள், நீர்நிலைகள், இடுகாடுகள் அனைத்தும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் அந்த இடங்களுக்கு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு, காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்ற சூழலை, அரசியல் ரீதியாக முற்றிலும் மாற்றி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி என்று கூறிய அவர், அதற்கு உறுதுணையாக இருந்தது வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் என்று குறிப்பிட்டார்.

ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு குடும்பத்தின் கட்சியாக கம்பெனியின் ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிற சூழலில், ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய ஒரு அரசியல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி, தாய் அமைப்போடு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறித்து, இந்த நிகழ்வு அனைவரையும் பதைபதைக்க வைத்ததாகவும் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது நிம்மதி அளிப்பதாகவும் கூறிய அவர், இதற்காக பங்காற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து, ரயில் விபத்துகளை பொருத்தவரை, ஒவ்வொரு நேரத்திலும்குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில்மத்திய அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருவதாகவும் விபத்துகளைப் பொறுத்தவரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து இருப்பதாக கூறுவதாகவும் ஆனால் எந்த இடத்திலும் பருவமழை முன்னேற்பாடுகளை சரியாக இந்த அரசு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இன்றைய அரசு மக்களுடைய துயர்களை புரிந்து கொள்கின்ற அரசாக இல்லை என்றும் கூறினார்.

மழைக்காலங்களில் கோவை லங்கா கார்னரில் மக்கள் சிரமப்படுவதாகவும் இந்த முறை அந்தப் பகுதியில் மழைநீர் நிற்காது என்று உறுதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் நிற்கிறதா? இல்லையா? என்பது மழை வந்தால்தான் தெரியும் என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து, அரசியல் கட்சிகள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான நடைமுறை என்றும் ஆனால் திமுக தலைவர் மாநிலத்தின் முதல்வரான பின்பும் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும்  கூறினார். மாநிலத்தின் முதல்வர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்து சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது என்றும் கூறினார். விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது தங்களின் எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.

இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மீது கொலை மிரட்டல் விடுவது புதிதில்லை என்றும் தமிழகத்திலேயே சித்தாந்தத்திற்காக அதிகமாக உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது தங்களுடைய இயக்கங்களில் தான் என்றும் கூறிய அவர், எந்த ஒரு தலைவருக்கும் அச்சுறுத்தல் என்று வருகின்றபோது காவல்துறையினர் உரிய கண்காணிப்புடன் அதனை கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...