கோவையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞரை காவலர் தாக்கியதாகக் கூறி, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை, கூட்ஸ்செட் சாலையில் டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் அவ்வழியாக வந்துள்ளார்.
ஆசிக் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கான எல்.எல்.ஆர் மட்டுமே வைத்திருந்ததால், காவலருக்கு பயந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர் ஆசிக் சென்ற இருசக்கர வாகனத்தை இழுத்து கீழே தள்ளியதாகவும், ஹெல்மெட்டால் ஆசிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த வெரைட்டி ஹால் காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர். இந்த வாக்குவாதம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.