கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பயிற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் மே 25ம் தேதியன்று காலை 10.30 மணியிளவில் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இம்முகாமில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பயிற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இது நாள் வரையிலும் கிடைக்கப்பெறாமல் இருப்பின் இதுகுறித்து தங்களது குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக மாதிரிப் படிவத்தில் மனுக்களாக நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.