கோவை சுரங்கப்பாதையில் மழை பாதிப்புள்ள இடங்களில் வாகனங்கள் செல்ல கலர் மார்க்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மழை பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை எம்பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளதாகவும், கோவையில் கடந்த இரு தினங்களில் பெய்த மழை காரணமாக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மழைநீர் தேங்கும் இடங்களாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மின் கம்பிகள் அறுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.



தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அரசியலுக்காக சிலர் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவை தான் என்றும், கோவை மக்களுக்கு அளவுகடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர் என்றும் அமைச்சர் பாராட்டினார். சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருப்பதாகவும், வரக்கூடிய காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோவைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...