கோவையில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கோவை துடியலூர் அருகே வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



வடமதுரையில் உள்ள எஸ்.எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கான கூட்டமும், கேஸ் கம்பெனி அருகே உள்ள தாரிகா மஹாலில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கோவை கூடலூர் நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது.



இந்தக் கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஓ.கே.சின்ராஜ், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கழக வளர்ச்சிப் பணிகள், மக்கள் பணிகள், அடையாள அட்டைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டங்களில் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் ஜெகன், மகளிர் அணி செயலாளர் விமலா, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் கூட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஆனந்தன், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், கோவை கூடலூர் நகராட்சி கழகச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் ரகுநாதன், எண்:4 வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ராமதாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...